சித்தர்கள் என்பவர்கள் யார்?
உட்கருவிகளான
மனம்,புத்தி,ஆங்காரம்,சித்தம்,என்றழைக்கப்படும் இந்நான்கில் உயர்க்கருவியான
சித்தத்தின் விருத்திகளை ஒடுக்கி அதன் மூலம் உடலைக்காட்டிலும் வேறுபட்ட்தும், உடல்
இயக்கத்திற்க்கு காரணமானதும், அழிவற்றதும், அறிவுவடிவானதுமான “ஆன்மாவே” தான் என்று
அறிந்துக்கொண்டும் பாவபுண்ணியங்களைக் கடந்தவர்களாய்,குறுகியகாலத்தில் அழியும்
தன்மைவாய்ந்த இந்த உடலை திடப்படுத்தி நீண்டகாலம் அழியாமல் இருக்கும்படி
செய்துகொண்டும் அந்ததேகத்தில் பல காலம்
வசித்துக்கொண்டும் பல பௌதிக ஆராய்ச்சிகள் செய்துவருபவர்களே சித்தர்களாவர்.
ஸ்ரீ பரமசிவன்-பார்வதி ஆதி
சித்தர்களாவர்.
(01)
விநாயகர்
(02)
நந்தி
(03)
சுப்ரமண்யர்
(04)
தந்வந்தரி
(05)
அகத்தியர்
(06)
புலத்தியர்
(07)
தேரையர்
(08)
திருமூலர்
(09)
காலாங்கிநாதர்
(10)
போகர்
(11)
புலிப்பாணி
(12)
காகபுசுண்டர்
(13)
எங்கோணர்
(14)
ரோமர்
(15)
டமரக்கர்
(16)
சுந்தரானந்தர்
(17)
பாம்பாட்டி
(18)
வான்மீகர்
(19)
கமலர்
(20)
கோரக்கர்
(21)
கொங்கனவர்
(22)
யூகி
(23)
ராமதேவர் (யாகோபு)
(24)
தக்ஷிணாமூர்த்தி
(25)
ஊர்வசி
(26)
விசுவாமித்திரர்
(27)
அழுகண்ணர்
(28)
கைலாசநாதர்
(29)
சட்டைநாத்ர்
(30)
சிவவாக்கியர்
(31)
கௌபாலர்
(32)
திருவள்ளுவர்
(33)
வசிட்டர்
(34)
கடுவளி
போன்றவர்கள் அசாதாரணமாக நமக்கு
தெரிந்த சித்தர்களாவர்கள் இவர்களைத்தவிர சித்தர்கள் கோடிகணக்கில் உள்ளனர்.இவர்கள்
அனைவரும் இன்றும் அழிவற்று ஜீவசமாதியில் வாழ்ந்துவருகின்றனர்.
சித்தர்கள் தங்கள் ஆராய்ச்சிமூலம்
ஸர்வநோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்துள்ளனர் நமக்கு தெரியாத இனிவரப்போகும் வியாதிகளுக்கும்
எளிமையான மருந்தைக்கூறியிருக்கின்றனர்.
மேலும் இவர்களின் அற்புதமான
கண்டுபிடிப்புகளில் கண்ணிமைக்கும் நேரத்திற்க்குள் வேறுகிரகங்களுக்கு சென்றுவரும்
மிகச்சிறிய விமானமாம் .இந்த விமானத்தைக்கொண்டு ஒருமணிநேரத்திற்க்குள் அடுத்தபிரபஞ்சத்திற்க்கு
சென்றுவரலாம்.
இதற்கடுத்து இவர்களின் மற்றொரு
கண்டுபிடிப்பு உலோகமாற்று,அதாவது ஒரு உலோகத்தின் மூலகூறுகளை இரசாயனத்தைக்கொண்டு
மாறுதலுக்கு உட்படுத்தி அதைமற்றொரு உலோகமாக மாற்றுவதாகும்.இதன்மூலம் இரும்பை
தாமிரமாகவும்,ஈயமாகவும், தங்கமாகவும்,மாற்றும் முறையை கூறியிருக்கின்றனர்.இதோடுமட்டுமல்லாமல் மரத்தின்
இலைச்சாருகளிகிருந்து தங்கம் ,வெள்ளி, ஈயம், செம்பு, போன்ற உலோகங்களை பிரித்தெடுக்கும்
முறையையும் கூறியிருக்கின்றனர்.
இது மற்றுமின்றி இறந்தவர்களை
உயிரூட்டும் மூலிகைகள்,வெட்டுண்ட உறுப்புக்களை பழுதில்லாமல்
அதேயிடத்தில்முன்போன்றே பொருத்தும் மூலிகைகள்,யார்கண்களுக்கும் தெரியாமல் மறைக்கச்
செய்யும் மூலிகைகள்,உருவத்தை மாற்றும் மூலிகைகள்,தாம்பத்யத்தில் பல நாட்கள்
பலபெண்களுடன் விந்தை வெளிப்படுத்தாமல் இன்பமாக உடலுறவில் ஈடுபடக்கூடிய
மூலிகைகள்,வசியமூலிகைகள், பணக்காரணாக யோகம் தரும் மூலிகைகள்,பேய் பில்லி துஷ்ட
சக்திகளை விறட்டுகம் மூலிகைகள், மனோவியாதிகளை போக்கும் மூலிகைகள்,பூமியில் புதையுண்ட
பொருட்களைக்காட்டும் மூலிகைகள்,போன்ற கோடிகணக்கான கண்டுபிடிப்புக்களை தங்கள்
ஆறாய்ச்சிமூலம் சித்தர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இப்படி மகிமைவாய்ந்த ஆவர்களால்
சொல்லப்பட்டவைகளில் முக்கியமானது பாஷாணவித்தையாகும்
பாஷாணம் என்றால் என்ன?
பாஷாணங்களென்பது பூமிக்கடியிலும்,மலைகளிலும்
கிடைக்க்கூடிய தாதுக்களாகும்!இது வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு காரணங்களால்
தோன்றியதாகவும் இந்த பாஷாணங்கள் மொத்தம் 64 வகைகள்யெனவும் இயற்கையாக கிடைகக்கூடியவைகள்
32 என்றும்,இப்படி இயற்கையாக கிடைகக்கூடிய பாஷாணங்களைக்கொண்டு செயற்கையாக உருவாக்கக்கூடியவை 32 என்றும் சித்தர்கள்
கூறியிருக்கின்றனர்.
பாஷாணங்களில் சத்துவம், ரஜோ,
மற்றும் தமோ என முன்றுகுணங்கள் அடங்கியதாக
இருக்கும் இதில் சத்துவகுணபாகமே உயிர்காக்கும்
மருந்தாகவும்,ரசவாத்திற்க்கும்(இரும்பு செம்பு பித்தளை வெள்ளி போன்ற உலோகங்களை
தங்கமாக மற்றுவதற்கும்), ஆகாயத்தில் பறக்கும் ககன குளிகைகள் வேறு அண்டம்
செல்லக்கூடிய விமானமணிகள் செய்யவும் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் சர்வவியாதிகளை
போக்க மருந்தாகவும்,மிகுந்த அதிர்ஷ்டத்தையும் மிகுந்த நன்மைபயப்பதாகவும் ஆகின்றது.
ரஜோகுணபாகம் மாந்தரீகம்,சாந்திபரிகாரங்கள்
போன்ற வேலைகளுக்காவும் மற்றும் உலோக பொருளாகவும் முகம் மற்றும் சிகை அலங்கார
பூச்சாகவும் பயன்படுகின்றது.
தமோகுணபாகம்
வண்ணங்களுக்கும்,மரஞ்செடிகொடிகளுக்கு உரமாகவும் பூச்சிக்கொல்லியாகவும்,மற்றும்
மிகுந்த நஞ்சுபாகமாக ஆகின்றது.
very good job i want to know more about this subject
ReplyDeleterespected sir i know Tamil to speak but but difficult to read Tamil script so pl post in transliteration method that is helpful to persons who like me namasthea
ReplyDeletechandrikaApr 26, 2012 07:26 PM
ReplyDeleteRespected guruji my humble request is if you upload photo of the above said bhashanams it can help to public.
Reply
yes chandrikas view is correct my request also same one